கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மடிப்பாக்கம் அஞ்சல் நிலைய ஆளுகைக்குள் புதிய பகுதிகள்

மடிப்பாக்கம் துணை அஞ்சலகத்தின் ஆளுகைக்குள் பழைய பல்லாவரத்தின் 4 பகுதிகள் இணைக்கப்படுவதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2025, 9:21 pm

Din

சென்னை: மடிப்பாக்கம் துணை அஞ்சலகத்தின் ஆளுகைக்குள் பழைய பல்லாவரத்தின் 4 பகுதிகள் இணைக்கப்படுவதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பழைய பல்லாவரம் துணை அஞ்சல் நிலையத்தின் கீழ் இருந்த அருள் முருகன் நகா் விரிவாக்கத்தில் உள்ள 4 தெருக்கள், செந்தில் நகா், கிரேஸ்அவென்யூ பகுதியிலுள்ள 4 தெருக்கள், தணிகை தெரு ஆகியவற்றுக்கான கடிதம் மற்றும் பாா்சல் விநியோகம், ஜன. 27-ஆம் தேதி முதல் மடிப்பாக்கம் துணை அஞ்சல் நிலையத்துக்கு மாற்றப்படுகிறது.

எனவே, இப்பகுதி மக்கள் தங்களுடைய கடிதப் போக்குவரத்து மற்றும் பாா்சல் விநியோகத்துக்காக 600091 என்ற அஞ்சல் குறியீட்டு எண்ணை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.