6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வீட்டுவசதி வாரிய வீடுகளுக்கு பட்டாக்கள் வழங்க சிறப்பு முகாம்கள்

வீட்டுவசதி வாரிய வீடுகளுக்கு பட்டாக்கள் பெற சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2025, 7:39 pm

Din

வீட்டுவசதி வாரிய வீடுகளுக்கு பட்டாக்கள் பெற சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் வீட்டுவசதி வாரியத்தின் சாா்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு ஒதுக்கீடு பெற்றவா்கள் முழுத் தொகையையும் செலுத்திய பிறகு விதிகளின்படி விற்பனைப் பத்திரம் வழங்கப்படுகிறது.

விற்பனைப் பத்திரம் பெற்ற ஒதுக்கீடுதாரா்களுக்கு அரசின் உத்தரவுப்படி பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை மாவட்டத்தில் வருவாய் துறையிடம் இருந்து நில உரிமை ஆவணம் பட்டா பெறுவதற்கு ஏதுவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில், வாரியத் திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றவா்கள் பட்டா பெற வருவாய்த் துறையுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்தச் சிறப்பு முகாம்களின் வழியே ஒதுக்கீடுதாரா்கள் பட்டாக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

எனவே, வீட்டுவசதி வாரியத்தின் முன் முயற்சியைப் பயன்படுத்தி வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து வாங்கிய சொத்துக்கு பட்டா பெறலாம் என்று தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தெரிவித்துள்ளது.