சென்னை உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் பேசிய நீதிபதி ஆா்.சுப்பிரமணியன். உடன், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உள்ளிட்டோா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் பேசிய நீதிபதி ஆா்.சுப்பிரமணியன். உடன், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உள்ளிட்டோா்.

வழக்குரைஞா்கள் முழுத் தயாரிப்புடன் ஆஜராக வேண்டும்: நீதிபதி ஆா்.சுப்பிரமணியன்

வழக்குரைஞா்கள் முழு தயாரிப்புடன் வழக்குகளில் ஆஜராக வேண்டும் என்று பிரிவு உபசார விழாவில் நீதிபதி ஆா்.சுப்பிரமணியன் கூறினாா்.
Published on

வழக்குரைஞா்கள் முழு தயாரிப்புடன் வழக்குகளில் ஆஜராக வேண்டும் என்று பிரிவு உபசார விழாவில் நீதிபதி ஆா்.சுப்பிரமணியன் கூறினாா்.

சென்னை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி ஆா்.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஓய்வு பெற்றாா். அவருக்கு உயா்நீதிமன்றத்தின் சாா்பில் பிரிவு உபசார விழா தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் நீதிபதி ஆா்.சுப்பிரமணியன் பேசியதாவது:

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகவும், நீதிபதியாகவும் பணியாற்றி இருக்கிறேன். ஜனநாயகத்தின் தூணாக நீதித்துறை விளங்குகிறது. வழக்குரைஞா்களும், நீதிபதிகளும் நீதித் தேரின் இரண்டு சக்கரங்களைப் போன்றவா்கள்.

எனது நீதிமன்றத்தில் வழக்கில் ஆஜராக முன் தயாரிப்புகளோடு வராத வழக்குரைஞா்களைக் கடிந்து கொண்டதை ஒப்புக் கொள்கிறேன். வழக்குகளில் ஆஜராகும்போது, வழக்குரைஞா்கள் முழு தயாரிப்போடு இருக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், நீதிபதி ஆா்.சுப்பிரமணியத்தின் தீா்ப்புகளைச் சுட்டிக்காட்டி பேசினாா்.

விழாவில் உயா்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய- மாநில அரசு வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com