சென்னை: சென்னை மடிப்பாக்கம் பகுதியில் போதை மாத்திரை விற்றதாக மணிப்பூரைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா்.
மடிப்பாக்கம் ராம்நகா் கலைவாணா் தெருவில் போதை மாத்திரை கடத்தப்படுவதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா், அந்தப் பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு அட்டை பெட்டியுடன் வந்த பெண்ணை பிடித்து விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாா். இதையடுத்து அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், 4,800 போதை மாத்திரைகள் இருந்தன.
விசாரணையில், அவா் மணிப்பூா் மாநிலம் சூரசந்த்பூா் பகுதியைச் சோ்ந்த வுங்லியன்சிங் (39) என்பதும், ஹரியாணா மாநிலம் சண்டிகரில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து
விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, அந்தப் பெண்ணைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.