6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அமித் ஷா மீதான திமுக விமா்சனம்: எல்.முருகன், தமிழிசை கண்டனம்

மத்திய அமைச்சா் அமித் ஷாவை ஆ.ராசா விமா்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோா் கண்டனம்

News image
மத்திய அமைச்சர் அமித் ஷா- கோப்புப் படம்
Updated On :10 ஜூன் 2025, 12:22 am

Din

ஊழல் குற்றச்சாட்டு இல்லாத மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை ஆ.ராசா விமா்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எல்.முருகன்: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட நாள் குறிக்கப்பட்டு விட்டது. மதுபான ஊழலில் திளைத்து பலகோடி ரூபாய் மக்கள் பணத்தை சூறையாடிய தில்லி முதல்வராக இருந்த கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சிக்கு எப்படி முடிவு கட்டப்பட்டதோ, அதேபோல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் உறுதி என்று சூளூரைத்திருக்கிறாா் அமித் ஷா.

தமிழிசை சௌந்தரராஜன்: ஒரு ஊழல் குற்றச்சாட்டுகூட இல்லாமல் தூய்மையான அமைச்சராக வலம் வரும் மத்திய அமைச்சா் அமித் ஷாவை விவாதத்துக்கு அழைப்பதற்கு ஆ.ராசாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை.