சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு!

ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவருக்கு இழப்பீடாக ரூ. 25 லட்சம் அறிவிப்பு
விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகள்
விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகள்ENS
Published on
Updated on
1 min read

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்த ரமேஷின் குடும்பத்தினருக்கு மெட்ரோ நிர்வாகம் ரூ. 5 லட்சம் அறிவித்த நிலையில், கட்டுமானப் பணி ஒப்பந்ததாரரான எல்&டி நிறுவனம் ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இவற்றில் மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை 5-ஆவது வழித்தடத்தில் (44.6 கி.மீ.) போரூர் முதல் சென்னை வர்த்தக மையம் இடையே கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தூண்கள் அமைக்கப்பட்டு, அதனை இணைக்கும் வகையில் தண்டவாளப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ராமாபுரத்தில் உள்ள டி.எல்.எஃப். தொழில்நுட்பப் பூங்கா மற்றும் எல்&டி நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது, இரு தூண்களுக்கு இடையே அமைக்கப்படும் தண்டவாள டிராக் சரிந்து விழுந்து வியாழக்கிழமை இரவு விபத்துக்குள்ளானது. 20 அடி உயரத்தில் இருந்து தண்டவாளம் சரிந்து விழுந்ததில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் (43) உயிரிழந்தார்.

பாலத்தை இணைக்கும் தூண்களைப் பொருத்த முயன்றபோது, திடீரென கீழே விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com