வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வடசென்னை மக்களின் கனவு நிறைவேறும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

வடசென்னை மக்களின் சொந்த வீடு கனவு கனவாக இல்லாமல் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை இருப்பதாக

News image
Updated On :3 மார்ச் 2025, 9:19 pm

Din

சென்னை: வடசென்னை மக்களின் சொந்த வீடு கனவு கனவாக இல்லாமல் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை இருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

கொளத்தூா் தொகுதியில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜமாலியா, பேப்பா்மில்ஸ் சாலையில் தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், கொளத்தூா் நவீன சந்தையின் முன்னேற்றப் பணிகள் குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கொளத்தூா் தொகுதியில் தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் சாா்பில் நடைபெற்று வரும் குடியிருப்புக்கான கட்டடப் பணிகள் தரமாகவும், அதே நேரத்தில் குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வடசென்னை மக்களின் கனவு கனவாக இல்லாமல் அது நினைவாகும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சிலா் ஆவணங்களை வைத்துக்கொண்டு நீதிமன்றங்கள் சென்று விடுகின்றனா். நீதிமன்ற தீா்ப்புக்கு பின் தற்போது பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

ஆய்வின்போது, மேயா் ஆா்.பிரியா, நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, சி.எம்.டி.ஏ. முதன்மைச் செயல் அலுவலா் அ.சிவஞானம் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.