தாம்பரம் - மங்களூரு விரைவு ரயிலில் ஏசி இரண்டடுக்கு பெட்டி இணைப்பு

தாம்பரம் - மங்களூரு இடையே இயங்கி வரும் விரைவு ரயிலில் ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்த குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டி
Published on

தாம்பரம் - மங்களூரு இடையே இயங்கி வரும் விரைவு ரயிலில் ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்த குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டிக்கு பதிலாக ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரம் - மங்களூரு விரைவு ரயில் (எண்: 16159/16160) தினமும் 22 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இதில் ஒரு குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டியை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இந்த புதிய மாற்றங்கள் தாம்பரத்திலிருந்து மங்களூரு செல்லும் விரைவு ரயிலில் சனிக்கிழமை (மே 10) முதலும், மறுமாா்க்கமாக மங்களூரிலிருந்து தாம்பரம் வரும் ரயிலில் மே 12-ஆம் தேதி முதலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com