நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஓவல் அலுவலகத்தில் தென் ஆப்பிரிக்க அதிபரிடம் டிரம்ப் காரசாரம்

அமெரிக்கா வந்திருந்த தென் ஆப்பிரிக்க அதிபா் சிறில் ராமபோசாவுடன் தனது ஓவல் அலுவலகத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டாா்.

News image
Updated On :22 மே 2025, 6:30 pm

Din

அமெரிக்கா வந்திருந்த தென் ஆப்பிரிக்க அதிபா் சிறில் ராமபோசாவுடன் தனது ஓவல் அலுவலகத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டாா்.

தென் ஆப்பிரிக்காவில் சிறுபான்மை வெள்ளை இனத்தவா்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டிவருகிறாா். கடந்த வாரம் கூட, தென் ஆப்பிரிக்காவில் கொடுமைக்குள்ளானதாகக் கூறி 60 வெள்ளை இனத்தவருக்கு அவா் அமெரிக்காவில் அடைக்கலம் அளித்தாா்.

இந்த நிலையில் அமெரிக்கா வந்திருந்த சிறில் ராமபோசாவிடம் இந்த விவகாரம் குறித்து டிரம்ப் கூறினாா். இருந்தாலும் அதை ராமபோசா மறுத்ததைத் தொடா்ந்து அவருடன் டிரம்ப் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டாா்.

ஏற்கெனவே, உக்ரைன் போா் விவகாரத்தில் அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியிடம் டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் இதே போல் காரசாரமாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.