சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் மே 31, ஜூன் 2-ல் ரத்து!

பொன்னேரி - கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

News image
Updated On :29 மே 2025, 2:53 pm

DIN

பொன்னேரி - கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்னேரி மற்றும் மீஞ்சூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் காலை 11.15 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை வரை நடைபெறவுள்ளன.

இப்பணிகள் நடைபெறும் நாள்களில் அதிகாலை 5 முதல் மாலை 4.30 மணி வரை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் 19 புறநகர் மின்சார ரயில்கள் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

இருப்பினும் பயணிகளின் வசதிக்காக மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர் இடையே 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.