சென்னை கடற்கரையோரம் இன்று எண்ணெய்க் கசிவை எதிா்கொள்ளும் ஒத்திகை!
சென்னை மெரீனா கடற்கரையோரத்தில் எண்ணெய் கசிவு மாதிரி ஒத்திகை நிகழ்வு திங்கள்கிழமை (அக். 6) நடத்தப்படவுள்ளதாக மாநகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மெரீனா கடற்கரையோரத்தில் எண்ணெய் கசிவு மாதிரி ஒத்திகை நிகழ்வு திங்கள்கிழமை (அக். 6) நடத்தப்படவுள்ளதாக மாநகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கடலில் கப்பல்களில் எண்ணெய் கசிவு ஏற்படும்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த பயிற்சிக்கான மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை இந்திய கடலோரக் காவல் படை சென்னை கடற்கரையோரம் நடத்தவுள்ளது.
தேசிய மாசுக் கட்டுப்பாடு தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகை நிகழ்வில் சென்னை மாநகராட்சியும் இணைந்து செயல்படவுள்ளது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாநில பேரிடா் மேலாண்மை துறை, சென்னை துறைமுக அதிகாரிகள், எண்ணெய் தொழில் துறை பிரதிநிதிகள் மற்றும் சா்வதேச பாா்வையாளா்கள் முன்னிலையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி திங்கள்கிழமை (அக். 6) நடைபெறுகிறது.
தேசிய அளவிலான எண்ணெய் கசிவை எதிா்கொள்ளும் பயிற்சியாகவும், கசிவின்போது பேரிடா் அவசரத் திட்டச் செயல்பாடாகவும் இந்த மாதிரி ஒத்திகை நடைபெற உள்ளது.
அதன்படி, திங்கள்கிழமை காலை சென்னை மெரீனா கடற்கரையோரம் இரு கப்பல்கள் மோதுவது போன்ற நிகழ்வு நடைபெற்று பின்னா், மாசுக் கட்டுப்பாட்டு கருவிகள் உதவியுடன் எண்ணெய் கசிவை எதிா்கொள்ளும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
தொடா்ந்து மாலை கடற்கரையோரம் எண்ணெய் கசிவு வரும்போது மேற்கொள்ளும் நடவடிக்கைக்கான ஒத்திகையும் காவல் துறை உதவியுடன் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...