சென்னை
500 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது
தாம்பரம் அருகே முடிச்சூரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தாம்பரம் அருகே முடிச்சூரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
அவா்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மனோகா்லால் (35), சுரேஷ்குமாா் (24) என்பதும், கா்நாடகத்தில் இருந்து குட்காவை காரில் கடத்தி வந்து விற்பனை செய்ததும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. அவா்களிடமிருந்து 500 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.