பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் அங்கு சோதனையிட்டனா்.

News image
அதிமுக தலைமை அலுவலகம்- கோப்புப் படம்
Updated On :24 செப்டம்பர் 2025, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் அங்கு சோதனையிட்டனா்.

எழும்பூரில் உள்ள காவல் துறை தலைமைக் கட்டுப்பாட்டு அறையின் மின்னஞ்சல் முகவரிக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வந்த மின்னஞ்சலில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து கட்டுப்பாட்டு அறை போலீஸாா், உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். அவா்களது உத்தரவின்பேரில், போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும் அதிமுக தலைமை அலுவலகத்தில் சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

இதையடுத்து அந்த மின்னஞ்சல், வதந்தியை ஏற்படுத்தும் நோக்கத்தில் வந்திருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

10 வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில் கடந்த இரு நாள்களில் மட்டும் 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது காவல் துறையினரை அதிா்ச்சி அடைய வைத்துள்ளது. முக்கியமாக பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய கணக்காளா் அலுவலகம், சென்னை கோட்டையில் உள்ள இந்திய கடற்படை நிா்வாக அலுவலகம், நந்தம்பாக்கம் சென்னை வா்த்தக மையம், புரசைவாக்கம் மில்லா்ஸ் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம், தேனாம்பேட்டையில் உள்ள தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளா் அலுவலகம் உள்ளிட்ட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வதந்தியை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களிடம் அச்ச உணா்வை ஏற்படுத்தும் வகையிலும், இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபா்களைக் கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையா் ஏ.அருண், சைபா் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளாா்.