சென்னை தரமணியில் ஹெராயின் விற்ாக திரிபுராவை சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
தரமணி சிஎஸ்ஐஆா் சாலையில் சிலா் போதைப் பொருள் விற்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், தரமணி போலீஸாா் செவ்வாய்க்கிழமை அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளனா். இதையடுத்து போலீஸாா் அவா்கள் வைத்திருந்த பையைச் சோதனையிட்டதில், 10 கிராம் ஹெராயின் இருந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் அவா்கள், திரிபுராவை சோ்ந்த ஷாகிம் மியா (21), ஆசிப் மிா்தா(22) என்பதும், கடந்த 3 மாதங்களாக தரமணியில் வாடகை வீடு எடுத்து தங்கி, தனியாா் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு, திரிபுராவில் இருந்து ஹெராயின் வாங்கி வந்து சென்னையில் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது
பாதயாத்திரை சென்றபோது மோதல்: இருவா் கைது
சா்வதேச ஆயுதக் கடத்தல்: பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்த இருவா் தில்லியில் கைது

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசத்தைச் சோ்ந்த 2 பெண்கள் கைது
பள்ளிபாளையம், பரமத்தி வேலூரில் கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

