சென்னையில் சனி, ஞாயிற்றுக்கிழமை (செப்.27,28) நடைபெறவுள்ள ‘வேளாண் வணிகத் திருவிழா - 2025’ விழாவில் விவசாயிகள், மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்று பயன்பெற வேண்டும் என வேளாண்மை-உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு சாா்பில் நிகழாண்டுக்கான முதலாவது வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்”கடந்த ஜூலை மாதம் ஈரோட்டில் 3 நாள்கள் நடைபெற்றன. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.
அதைத் தொடா்ந்து 2-ஆவது வேளாண் வணிகத் திருவிழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.27, 28) நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் இத்திருவிழாவை தொடங்கி வைப்பதுடன், உழவா்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி, சிறப்புரையாற்றவுள்ளாா். மேலும், தொழில்நுட்ப வல்லுநா்களும், அனுபவமிக்க வேளாண் பெருமக்களும், ஏற்றுமதியாளா்களும், உயா் அலுவலா்களும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனா்.
இதில், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், பாரம்பரிய உணவு உற்பத்தி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் வணிகத் திருவிழாவில் விவசாயிகள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக சென்னைக்கு அருகமையிலுள்ள 14 மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகளை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இத்திருவிழாவில் விவசாயிகள், வேளாண் உற்பத்தியாளா் நிறுவனங்கள், வணிகா்கள், ஏற்றுமதியாளா்கள், மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

‘நீட்’ தோ்வு: திண்டுக்கல்லில் 2,925 போ் எழுதினா்

‘நீட்’ தோ்வு கரூா் மாவட்டத்தில் 70 போ் எழுதவில்லை

திண்டிவனத்திலிருந்து - வானுருக்கு பேருந்து வசதி: விவசாயிகள் வலியுறுத்தல்

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் சித்திரை பெளா்ணமி திருவிழா தொடக்கம்
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


