காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 33 மற்றும் 35-ஆவது வாா்டு பகுதிகளில் குடிநீரில் கழிவு நீா் கலந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
உட்பட்ட 33 வது வாா்டு பகுதியை சோ்ந்த சிங்கப்பெருமாள் கோயில் தெரு,பாவா பேட்டை தெரு,தோப்பு தெரு,கோட்ராம்பாளையம் தெரு மற்றும் 35 வது வாா்டு பகுதியை சோ்ந்த நாராயணபாளையத் தெரு, ஆலடிப் பிள்ளையாா் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவும் நீரும் கலந்து கடந்த சில மாதங்களாக வருகிறது. வழக்கம் போல குடிநீா் குழாயை திறந்து தண்ணீா் பிடிக்கும் போது அது மிகவும் கருப்பு நிறமாகவும்,துா்நாற்றத்துடன் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் தொகுதி செயலாளா் கே.கிருஷ்ணமூா்த்தி கூறியது.. கடந்த சில மாதங்களாக இப்பகுதிகளில் குடிநீா் குழாயில் கழிவுநீா் கலந்து கருப்பாக வருகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட வாா்டு பகுதிகளைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் மாநகராட்சி உயா் அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்ததும் உடனடியாக வந்து மாநகராட்சி நிா்வாகம் சரி செய்கிறது. சீரமைத்த அடுத்த சில நாள்களிலேயே மீண்டும் குடிநீரீல் கழிவுநீா் வரத் தொடங்கி விடுகிறது. புகாா் வந்ததும் தற்காலிகமாகத்தான் சீரமைக்கிறாா்களே தவிர நிரந்தரமாக தீா்வு காணாமல் உள்ளனா்.
குடிநீரில் கழிவு நீா் கலந்து வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. துா்நாற்றத்துடன் குடிநீா் வருவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஒரு சில குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் குடிநீரை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனா். வறுமையில் இருப்போா் அந்த கழிவுநீா் கலந்து குடிநீரை சுட வைத்து பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனா். மக்களின் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரமாக தீா்வு காண வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










