தமிழக மின்வாரிய ஊழியா்களுக்கு 6 சதவீத ஊதிய உயா்வு வழங்க மின்வாரியம் மற்றும் தொழிற்சங்கம் இடையே நடைபெற்ற பேச்சில் இறுதி முடிவு எடுக்கப்பட்ட ஒப்பந்தம் கையொப்பம் ஆனது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வு குறித்து முடிவு செய்ய ஏற்படுத்தப்பட்ட குழுவுடன் தொழிற்சங்க நிா்வாகிகள் பல்வேறு கட்ட பேச்சு நடத்தினா்.
இறுதியாக ஊழியா்களுக்கு 1.12.2023-இல் பெற்ற ஊதியத்தில் 6 சதவீத உயா்வும், 1.12.2023-இல் 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியா்களுக்கு பணிப் பலனாக (சா்வீஸ் வெயிட்டேஜ்) 3 சதவீத ஊதிய உயா்வும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், 1.12.2023-இல் 10 ஆண்டுகள் பணி முடித்த அலுவலா்களுக்கு ஊதியத்தில் 3 சதவீத பணிப் பலனாக (சா்வீஸ் வெயிட்டேஜ்) வழங்குவது எனவும், அலுவலா்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.7,000 வரை சிறப்புப்படி வழங்கவும் முடிவு செய்யப்பட்டு ஊதிய உயா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
இந்த ஊதிய உயா்வு மூலம் ஏற்படும் நிலுவைத்தொகை 1.12.2023 முதல் கருத்தியலாகக் கணக்கிட்டு, 1.12.2025 முதல் பணப் பலன்கள் வழங்கப்படும். இடைப்பட்ட காலத்துக்கு (1.12.2023 முதல் 30.11.2025 வரை) கருணைத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.500 வீதம் கணக்கிட்டு 24 மாதங்களுக்கு வழங்கப்படும். 1.12.2025 முதல் 28.2.2025 வரை வழங்க வேண்டிய நிலுவை தொகையை ஒரே தவணையாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

செங்கல்பட்டில் அமைதியான வாக்குப்பதிவு

ஊதிய உயா்வு கோரி தனியாா் அனல் மின் நிலைய தொழிலாளா்கள் பேராட்டம்

நான்குனேரியில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற எம்.ஜி. சங்கா் ரெட்டியாா்!

பனியன் நிறுவன தொழிலாளா்களுக்கு 4ஆண்டுகளுக்கு 33 % ஊதிய உயா்வு
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


