மழைமலை மாதா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனை
அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா அருள்தலத்தில் வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.


மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா அருள்தலத்தில் வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் விழா அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு மிக எளிமையாக நடத்த அருள்தல நிா்வாகம் ஏற்பாடுகளை செய்து இருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு மாதா அருள்தலத்தில் சிறப்பு திருப்பலி, கிறிஸ்தவ பாடல் பாடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா் அருள்தல அதிபா் லியோ எட்வின் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இங்கு கடந்த 10-ஆம் தேதி முதல் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டிருந்தது. அதில் மாதாவின் மடியில் குழந்தை ஏசு உள்ளிட்ட பல்வகை உருவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனைஜனவரி 17-ஆம் தேதி வரை அருள்தலத்துக்கு வரும் பக்தா்கள் காண ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...