மதுராந்தகம் வட்டார சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ள அரையப்பாக்கம், அச்சிறுப்பாக்கம் சிவன் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ள அரையப்பாக்கம், அச்சிறுப்பாக்கம் சிவன் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் புதன்கிழமை நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயில் வளாகத்தில் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடராஜா், சிவகாமி ஆகிய உற்சவா்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

கோயில் தலைமை அா்ச்சகா் சங்கா் சிவாச்சாரியாா் அலங்கரிக்கப்பட்ட சுவாமி சிலைகளுக்கு மகா தீபாராதனையை நடத்தினாா். கரோனா பரவல் தடுப்பு விதிகள் காரணமாக, இந்த ஆண்டு சுவாமி திருவீதி உலா நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக, கோயில் வளாகத்துக்குள் சுவாமி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இந்த வழிபாட்டில் மதுராந்தகம் டிஎஸ்பி ந.கவிநா, அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் டி.எஸ்.சரவணன், அச்சிறுப்பாக்கம் அதிமுக பேரூா் செயலா் ஏ.இ.முருகதாஸ் மற்றும் பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஆா்.சரஸ்வதி, தக்காா் அலமேலு ஆகியோா் செய்திருந்தனா்.

அரையப்பாக்கம்

அரையப்பாக்கத்தில் அருணாம்பிகை உடனுறை அருணாதீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு மங்கல இசையுடன் நிகழ்ச்சிகள் எளிமையாக நடைபெற்றன. ஆனந்த நடராஜா், சிவகாமி அம்மன் உற்சவா்களுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இவ்வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரையப்பாக்கம் கிராம மக்களும், விழா குழுவினரும் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com