

செங்கல்பட்டு மாவட்டம், கயப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித் துறையின் சார்பில் கலைத் திருவிழா நடைபெற்றது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கயப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தலைமையாசிரியர் ஆர். நாகமணி அரசி தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் எஸ்எம்சி தலைவர் முன்னிலைமில் பள்ளி மாணவிகளுக்கு ஒவியம் வரைதல், களிமண் சிற்பம் செய்தல், வர்ணம் தீட்டுதல், காய்கறிகள், பழங்கள் மூலம் பொம்மைகள் வடிவமைத்தல், பேச்சு, கட்டுரைப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, நாட்டுபுற நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.