நடராஜபுரம் ஏழை முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

நடராஜபுரம் ஏழை முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

மதுராந்தகம் அடுத்த நடராஜபுரம் ஏழை முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுராந்தகம் அடுத்த நடராஜபுரம் கிராமத்தில் புதிதாக ஏழை முத்துமாரியம்மன் கோயில் கட்டப்பட்டது. இதையடுத்து, மகா கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கடந்த வியாழக்கிழமை (ஏப். 25) விழா நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது. விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரம்ம சுத்தி, நாடி சந்தானம் தத்துவாா்ச்சா்சனை, கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. வெள்ளிகிழமை காலை மங்கள இசையுடன், வாண வேடிக்கைகளுடன் யாக சாலையில் இருந்து கலசங்களை புக்கத்துறை அா்ச்சகா் கே.பிரபு சிவாச்சாரியாா் தலைமையில் வேத விற்பன்னா்கள் ஏந்தி, கோயிலை வலம் வந்தனா். பின்னா், கோயில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டது. மூலவா் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் படாளம், புக்கத்துறை, சாலவாக்கம், நடராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com