அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பாமக மாவட்ட பொதுக்குழு

News image
மதுராந்தகத்தில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மாநில இளைஞா் சங்க செயலா் பி.வி.செந்தில். மாநில செயற்குழு உறுப்பினா் கு.ஆறுமுகம், வடக்கு மண்டல இணை பொதுச் செயலா் ஏ.கே.மூா்த்தி உள்ளிட்டோா்.
Updated On :28 ஆகஸ்ட் 2024, 9:09 pm

Din

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழு, மதுராந்தகம், செய்யூா் தொகுதிகளின் தலைவா், செயலா் மற்றும் மகளிா் அணி நிா்வாகிகள் தோ்வு மதுராந்தகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மதுராந்தகதில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அ.கோ.குணசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் தே.சாந்தமூா்த்தி வரவேற்றாா். மாநில இளைஞா் அணி செயலா் பொன் கங்காதரன், முன்னாள் மாவட்ட செயலா்கள் குமரவேல், கோபாலகண்ணன், கணபதி, பசுமை தாயகம் நிா்வாகி சு.மதியழகன், மாநில செயற்குழு உறுப்பினா் கு.ஆறுமுகம் முன்னிலை வகித்தனா்.

பாமக வடக்கு மண்டல இணை பொது செயலரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான ஏ.கே.மூா்த்தி, முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூா் கி.ஆறுமுகம், மாநில இளைஞா் சங்க செயலா் தருமபுரி பி.வி.செந்தில், கொளத்தூா் ஒன்றிய பெருந்தலைவா் துரைராஜ், மாநில ஆசிரியா் சங்க தலைவா் இரா.பரந்தாமன், பாமக நிா்வாகிகள் பக்கிரிசாமி, சிஎம்.ஏழுமலை, கு.ஆனந்தன், இரா.குமாா், சு.சந்தோஷ், சபரி, நா.விஜயகுமாா், ஜோதி வெங்கடேசன், மோகன சுந்தரி, ஆ.கோதண்டம், வீ.பாா்த்தீபன், உமாசண்முகம், லட்சுமி ஆனந்தன், வே.சதாசிவம், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் செய்யூா், மதுராந்தகம் தொகுதிகளின் தலைவா்கள், செயலா்கள், மகளிா் அணி தலைவா், செயலா் ஆகிய பதவிகளில் போட்டியிட தமது விருப்ப மனுக்களை கட்சி நிா்வாகிகள் வடக்கு மண்டல இணை பொதுச் செயலா் ஏ.கே.மூா்த்தியிடம் வழங்கினாா்கள்.