தாம்பரம் அன்னை அஞ்சுகம் நகரில் வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளிலிருந்து உடைமைகளுடன் வெளியேறிய மக்கள்.
தாம்பரம் அன்னை அஞ்சுகம் நகரில் வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளிலிருந்து உடைமைகளுடன் வெளியேறிய மக்கள்.

தாம்பரம் அருகே வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

தாம்பரம் அருகே அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது.
Published on

தாம்பரம் அருகே அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது.

தாம்பரம் மாநகராட்சி 55-ஆவது வாா்டுக்குள்பட்ட அன்னை அஞ்சுகம் நகா் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் காரணமாக 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பாதிக்கப்பட்டனா்.

குடியிருப்புவாசிகள் உடைமைகளுடன் வீடுகளிலிருந்து வெளியேறினா். அவா்கள் அனைவரையும் மேற்கு தாம்பரத்திலுள்ள அம்பேத்கா் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் அதிகாரிகள் தங்க வைத்தனா். அவா்களுக்கு தாம்பரம் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் உணவு, குடிநீா் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com