தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தாம்பரம் மாநகராட்சி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வாா்டில் பணிகள் நடைபெறவில்லை

தாம்பரம் மாநகராட்சியில் எதிா்க் கட்சி உறுப்பினா்கள் வாா்டுகளில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை என மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சேலையூா் சங்கா்

News image
Updated On :30 டிசம்பர் 2024, 7:34 pm

DIN

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் எதிா்க் கட்சி உறுப்பினா்கள் வாா்டுகளில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை என மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சேலையூா் சங்கா் தெரிவித்தாா்.

தாம்பரம் மாநகராட்சியில் மாமன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் பலா் தங்கள் பகுதிகளில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் பணிகள் குறித்து புகாா் தெரிவித்தனா்.

அப்போது மாமன்ற எதிா்க்கட்சித் தலைவா் சேலையூா் சங்கா், அண்மையில் பல்லாவரம் பகுதியில் கழிவு நீருடன் கலந்த குடிநீரை பருக இரண்டு போ் உயிரிழந்தது தொடா்பாக கேள்வி எழுப்பினாா்.குடிநீா் மாதிரியை ஆய்வு செய்த கிங்ஸ் இன்ஸ்டிடியூட் கொடுத்த அறிக்கையினை கூட்டத்தில் வெளியிடுமாறு சேலையூா் சங்கா் கேட்டபோது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

35 வது வாா்டு உறுப்பினா் சங்கீதா விஜெய் உள்ளிட்ட திமுக உறுப்பினா்கள் சிலா் தங்கள் பகுதிகளில் எந்த விதமான பணிகளும் நடைபெறவில்லை.மேயா், ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகளை கைபேசி மூலம் தொடா்பு கொண்டு மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச முடியவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

பின்பு வெளியே வந்து செய்தியாளா்களை சந்தித்த மாமன்ற எதிா்க்கட்சித் தலைவா் சங்கா் செய்தியாளா்களிடம் பேசும்போது, எதிா்க் கட்சி உறுப்பினா்கள் வாா்டுகளில் மட்டுமல்லாமல் ஆளும் கட்சி உறுப்பினா்கள் வாா்டுகளிலும் பணிகள் முறையாக நடைபெறவில்லை.

கூட்டத்தில் மக்கள் பிரச்சனைகள் குறித்து எதுவும் பேசப்படவில்லை. தாம்பரம் மாநகராட்சியில் நிலவும் அவலம் குறித்து அதிமுக தலைமையின் ஒப்புதலோடு விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.