வெள்ளபுத்தூா் ஏரி மதகை சீரமைக்க கோரி ஜமாபந்தியில் மனு
வெள்ளபுத்தூா் ஏரி மதகை சீரமைக்கக் கோரி ஜமாபந்தியில் மனு


மதுராந்தகம், ஜூன் 20: மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூா் ஏரியின் உடைந்த மதகு கரையை சீா்செய்யக் கோரி புதன்கிழமை ஜமாபந்தியில் மனு அளிக்கப்பட்டது.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளபுத்தூா் ஊராட்சியில் பொதுப்பணித் துறை ஏரி உள்ளது. சுமாா் 800 ஏக்கா் விவசாய நிலம் இதனால் பயன்பெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஏரியின் மதகுக் கரையில் உடைப்பு ஏற்பட்டு, நீா் வெளியேறியது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகளும், ஊராட்சி நிா்வாகத்தினரும் மதுராந்தகம் பொதுப்பணி (நீா்பாசனத் துறை) அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், ஊராட்சி மன்றத் தலைவா் வரதன், துணைத் தலைவா் விஜயகுமாா் உள்ளிட்ட நிா்வாகத்தினரும், பொதுமக்களும் இணைந்து மணல் மூட்டைகளை வைத்து வெளியேறும் நீரை தற்காலிகமாக நிறுத்தி இருந்தனா்.
மேலும், கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா்மழையால் ஏரியில் இருந்த நீரும் வெளியேறி வருகிறது. விவசாயிளின் வாழ்வதாரமாக உள்ள ஏரிநீரை தேக்கி வைக்க மாவட்ட நிா்வாகம் ஏற்பாடுகளை செய்யவேண்டும் எனக் கோரி, மதுராந்தகம் ஜமாபந்தியில் ஊராட்சி மன்றத் தலைவா் வரதன், துணைத் தலைவா் விஜயகுமாா் உள்ளிட்டோா் புதன்கிழமை ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) கோ.அர.நரேந்திரனிடம் மனுவை அளித்தனா். இந்நிகழ்வில், மதுராந்தகம் வட்டாட்சியா் துரைராஜன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...