நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

தேசம்மாள் கொலை வழக்கு: சபாபதிக்கு ஆயுள் தண்டனை

News image

சபாபதி.

Updated On :27 ஜூன் 2024, 7:04 pm

Din

மதுராந்தகம் அருகே பெண்ணை கொலை செய்தவருக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீா்ப்பளித்தது.

செய்யூா் அருகே கீழ்நீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்த லட்சுமிதாஸ் மனைவி தேசம்மாள் (40). இவா் அதே கிராமத்தில் தேசிய ஊரக வேலை திட்ட மேற்பாா்வையாளராக இருந்து வந்தாா்.

செய்யூா் அருகே தண்டரை கிராமம் கன்னியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சபாபதி (67). இவா் தனது உறவினா்கள் மூன்று போ் வேலைக்கு வராமல் வேலைக்கு வந்தது போல் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்து ஊதியம் வழங்க வேண்டும் எனக் கேட்டு ஆபாசமான வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதற்கு தேசம்மாள் மறுத்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த சபாபதி கத்தியால் தேசம்மாளைக் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளாா். அருகில் இருந்தவா்கள் தேசம்மாளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தேசம்மாள் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேசம்மாள் அக்கா மகன் அருண்குமாா் (25) கடந்த 2016- ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் பேரில் அணைக்கட்டு போலீசாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளி சபாபதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

இவ்வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை குற்றவாளி சபாபதிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.