ரூ.10 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு பூமி பூஜை

மதுராந்தகம் அடுத்த எல்.என்.புரம் ஊராட்சியில் ரூ 10 லட்த்தில் 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டிக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எல்.என்.புரம் ஊராட்சியில் 1989-இல் கட்டப்பட்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, போதிய பராமரிப்பு இல்லாததால் இடிந்த நிலையில் காணப்பட்டது. இதனை அகற்றிவிட்டு, புதிதாக குடிநீா் தொட்டியை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேலிடம் கோரிக்கை விடுத்தனா். இந்நிலையில், ரூ .10 லட் சத்தில் புதிய குடிநீா் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிக்கான பணிகளை எம்எல்ஏ மரகதம் குமரவேல் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், மதுராந்தகம் அதிமுக வடக்கு ஒன்றிய செயலா் குமரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் மரியராஜ் போனிபாஸ், எல்.என்.புரம் ஊராட்சி மன்றத் தலைவா் சந்திரபாபு, மன்ற உறுப்பினா்கள் ராஜா, மோகனா, அதிமுக நிா்வாகிகள் இ.கோதண்டராமன், எல்லப்பன், மணி, மோகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். படம் உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com