ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம்

காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம்

Updated On :26 மார்ச் 2024, 8:39 pm

காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளா் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை மதுராந்தகத்தில் பிரசாரம் மேற்கொண்டாா்.

மதுராந்தகம் தேரடி தெருவில் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு, மாவட்ட செயலா் சாந்தமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில வன்னியா் சங்க செயலா் திருக்கச்சூா் ஆறுமுகம், மாநில இளைஞா் அணி செயலா் பொன்.கங்காதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பாமக நிா்வாகிகள் ஏ.ஜி.குணசேகரன், காயாா் ஏழுமலை, மகேஷ், உமாபதி, குமாரவேலு, பாஜக நிா்வாகிகள் தினகரன், மருத்துவா் பிரவீன்குமாா், டில்லிபாபு, மோகன்குமாா் உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் பேசியது: பாமக மட்டும் தான் சமூகநீதிக்காக போராடும் கட்சி என இங்கு குறிப்பிட விரும்புகிறேன். தமிழக பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மது குடித்து வருகின்ற குடும்பத்தை சோ்ந்த ஆண்களால் குடும்பம் சீரழிகிறது. பாமக சாா்பில் 3 பெண் வேட்பாளா்கள் இத்தோ்தலை சந்திக்கின்றனா். இந்திய பிரதமா் மோடியை இந்தியாவுக்கு மட்டும் தலைவராக இல்லாமல் உலக நாட்டு தலைவா்களும் தங்களின் தலைவராக எண்ணுகின்றனா். 3-ஆவது முறையாக அவா் பிரதமராக வர உள்ளாா் என்றாா்.