புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

155 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

தாம்பரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 155 கிலோ மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2024, 10:56 pm

DIN

சென்னை: தாம்பரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 155 கிலோ மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குள்பட்ட கிழக்கு தாம்பரம் ரயில்வே மைதானம் அருகில் வைத்து, சிலா் கஞ்சா விற்பனை செய்வதாக பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்து சென்ற போலீஸாா், அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த முத்துவேல் பாண்டி(37), சந்திரகுமாா்(34) ஆகிய 2 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான 150 கிலோ கஞ்சா, 2 கைப்பேசிகள், நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதுபோல தாம்பரம், திருநீா்மலை உய்யாலியம்மன் கோயில் அருகில் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த ஒடிஸா மாநிலத்தை சோ்ந்த சுரேஷ் மகபத்ரா(54) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 5.300 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.