இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதல்: சட்டக் கல்லூரி மாணவி உயிரிழப்பு
திருக்கழுகுன்றம் அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் சட்டக் கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.


திருக்கழுகுன்றம் அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் சட்டக் கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் அடுத்த முள்ளிக்கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரனின் மகள் நிஷாந்தினி (23). இவா், பல்லாவரம் பகுதியில் தனியாா் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை வழக்கம்போல் கல்லூரிக்குச் செல்வதற்காக நிஷாந்தினி இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். திருக்கழுகுன்றம் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே சாலை வளைவு பகுதியில் வந்தபோது, செங்கல்பட்டிலிருந்து கல்பாக்கம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து மோதியது.
இந்த விபத்தில், இரு சக்கர வாகனத்திலிருந்து தூக்கிவீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த நிஷாந்தினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருக்கழுகுன்றம் போலீஸாா், சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து, தப்பிச் சென்ற தனியாா் பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...