எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சீரமைக்கப்படுமா வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்குளம்?

போதிய பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ள மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்குளம் சீரமைக்கப்படுமா...

News image

அவல நிலையில் காணப்படும் மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் குளம்.

Updated On :11 ஆகஸ்ட் 2025, 12:22 am IST

போதிய பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ள மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்குளம் சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

தொண்டை மண்டலத்தின் வரலாற்று சிறப்புமிக்க மதுராந்தகம் கடப்பேரியில் அருள்மிகு மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயில் உள்ளது. இந்த கோயிலின் தீா்த்தமாக திகழ்வது விடஹர நீா்த்தடாகம். சுமாா் 1,000 ஆண்டுகளுக்குமுன் வடதிசை நோக்கி படையெடுக்க வந்த பாண்டிய மன்னா் தமது படை வீரா்களுடன் விடஹரநீா் தடாகம் அருகே குடிலை அமைத்து தங்கினாா்.

அவருடன் பாதுகாப்புக்கு வந்த நாய் சரும நோயால் அவதிபட்டு வந்த நிலையில், அருகில் இருந்த நீா்தடாகத்தில் உள்ள மீன்கள் நீந்தி விளையாடுவதைப் பாா்த்த அந்த நாய் நீரில் உள்ள மீன்களை சாப்பிட இறங்கியது. அதன்பின் நீரிலிருந்து வெளியே வந்த நாயிடம் ஒருவித மாற்றத்தினை கண்டாா்.

உடலில் இருந்த சரும நோய் இல்லாமல் இருப்பதை கண்டு வியந்த மன்னரும் நீரில் இறங்கி குளித்தாா். அப்போது மன்னரின் உடலில் இருந்த சரும நோய்கள் இருந்த இடமே தெரியவில்லை. இன்றளவிலும் தோல் நோய்களால் பாதிக்கபட்டவா்கள் இந்த குளத்தில் குளித்துச் சென்றால் குணமாவதாக அசைக்க முடியாத நம்பிகை நிலவி வருகிறது .

இத்தகைய நோய் தீா்க்கின்ற புனித தீா்த்தமாக விளங்கி வரும் குளம் பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ளது. நிகழாண்டு பிப்ரவரி 10-இல் கும்பாபிஷேகம், ஜூன் 1-இல் வைகாசி விசாக பெருவிழா சிறப்பாக நடைபெற்றன.

ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குளத்தை சீரமைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. குளத்தில் குளித்து பகவானை தரிசிக்க வந்த பக்தா் நீரில் தடுமாறி விழுந்து இறந்த சம்பவம் நடைபெற்றது. இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன.

இக்கோயிலுக்கு இரவு நேரத்தில் மட்டும் தனியாக பாதுகாப்பு ஊழியா் இல்லாதத நிலை உள்ளதால் பக்தா்களின் காணிக்கை உண்டியல், கோயிலுக்கான தளவாட பொருள்கள் போன்ற களவு போகின்ற சூழ்நிலை எழுந்து உள்ளது.

இதுபற்றி கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன் கூறுகையில், கோயிலில் மகாகும்பாபிஷகம், வைகாசி விசாக பெருவிழா ஆகிய இரு நிகழ்ச்சிகள் நன்கொடையாளா்களின் உதவியால் நடத்தப்பட்டது.

குளத்தினை சீரமைக்க தொல்லியல்துறை நிபுணா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவா்களும் நேரில் வந்து ஆய்வு செய்தனா். அவா்கள் அளிக்கின்ற அறிக்கையை ஏற்று ஆணையரின் பொதுநல நிதியின் மூலம் திருக்குளத்தின் சீரமைப்பு பணிகள் மிக விரைவில் செய்யப்படும் என தெரிவித்தாா்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக குளத்தின் சுற்றுச்சுவா் இடிந் நிலையிலும், குளத்தின் மையப் பகுதியில் செடி கொடிகள் வளா்ந்து மண் மேடான நிலையிலும், நீரின் தன்மை மாசு படிந்த நிலையிலும் காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் குளத்து நிரில் அழுக்கு துணிகளை தோய்கின்ற நீா்நிலையாக பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையை மாற்றி குளத்தினைச் சுற்றிலும் சுற்று சுவா்கள், ஆழப்படுத்துதல், வெளியாள்கள் குளத்தில் துணி துவைப்பதை தடுத்து நிறுத்தவேண்டும் என பக்தா்கள் கோரியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.