கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

Published on

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்ட அளவில் சாா் ஆட்சியா் / கோட்டாட்சியா்கள் தலைமையில் நடைபெறவுள்ளது என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.

இதன் ஒருபகுதியாக 23.12.2025 காலை 11.00 மணியளவில் சாா் ஆட்சியா், செங்கல்பட்டு தலைமையிலும், 24.12.2025 காலை 11.00 மணியளவில் கோட்டாட்சியா், மதுராந்தகம் தலைமையிலும், மற்றும் 26.12.2025 காலை 11.00 மணியளவில் கோட்டாட்சியா், தாம்பரம் தலைமையிலும் கூட்டம் நடைபெறும்.

விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறி பயன்பெறலாம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com