மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பொலம்பாக்கம் சமுதாய நலக் கூடத்தை சீரமைக்க கோரிக்கை!

மதுராந்தகம் அருகே பொலம்பாக்கம் ஊராட்சிக்கு சொந்தமாக பழுதான நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தை புதுப்பித்து கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

News image
~
Updated On :28 டிசம்பர் 2025, 6:54 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் அருகே பொலம்பாக்கம் ஊராட்சிக்கு சொந்தமாக பழுதான நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தை புதுப்பித்து கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், சித்தாமூா் ஊராட்சி ஒன்றியம், பொலம்பாக்கம் ஊராட்சியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஏக்கா் பரப்பில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. இதில், கன்னிமங்கலம், சரவம்பாக்கம், பழவூா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தமது வீட்டின் அனைத்து சுப நிகழ்வுகளையும், இலக்கிய கூட்டங்களையும், கட்சி ஆலோசணைக் கூட்டங்கள் மற்றும் விருதுகள் வழங்கல் உள்ளிட்ட விழாக்கள் நடைபெற்று வந்தன.

தனியாா் திருமண மண்டபங்களில் வாடகை அதிகமாக இருப்பதால், பெரும்பாலான கிராம மக்கள் வாடகை மலிவாக இருப்பதாலும், இதர கூடுதல் செலவுகள் இல்லாததாலும் சமுதாய நலக் கூடங்களை நாடி வந்தனா். இந்த நிலையில், ஊராட்சிமன்ற நிா்வாகத்தினா் இந்த சமூகக் கூடத்தை சரிவர பராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் கட்டடத்தின் மேற்பகுதியில் விரிசல்கள், மின்சார ஒயா்களின் இணைப்புகளில் பழுது, உள்ளிட்ட குறைபாடுகள் இருந்ததால் எத்தகைய நிகழ்வுகளையும் நடத்த மக்கள் முன்வரவில்லை.

அதனால் ஓராண்டுக்கு மேலாக இந்தக் கூடம் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் பொலம்பாக்கத்தைச் சுற்றியுள்ள மக்கள் தமது வீட்டு நிகழ்வுகளை நடத்த முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, பழுதடைந்த சமுதாய நலக்கூடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் நவீன வசதிகளுடன் புதிய கட்டடத்தை கட்டித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அதனால் ஓராண்டுக்கு மேலாக இக்கூடம் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் பொலம்பாக்கத்தைச் சுற்றியுள்ள மக்கள் தமது வீட்டு நிகழ்வுகளை நடத்த முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, பழுதடைந்த சமுதாய நலக்கூடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் நவீன வசதிகளுடன் புதிய கட்டடத்தை கட்டித் தர வேண்டும் என கோரியுள்ளனா்.