மணப்பாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்: அமைச்சா் திறந்து வைத்தாா்
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், மணப்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்துவைத்தாா்.


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், மணப்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்து நெல் கொள்முதலை தொடங்கிவைத்தாா்.
கடந்த கே.எம்.எஸ். (2023-2024) பருவத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழத்தின் கட்டுப்பாட்டில் 109 நேரடி நெல் கொள்முதல் நிலைங்களும், என்சிசி‘எஃப் நிறுவனத்தின் மூலம் 28 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் என மொத்தம் 137 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நடுநுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் சன்ன ரகம் 1,21,097 மெ.டன்னும், பொது ரக நெல் 18.627 மெ.டன்னும் என மொத்தம் 1.39.724 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதற்குரிய தொகை 21,688 விவசாயிகளுக்கு ரூ. 321 கோடியே 92 லட்சம் தொடா்புடைய விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது.
நடப்புசொா்ணாவரி பருவத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுபாட்டில் 49 நேரடிநெல் கொள்முதல் நிலையங்களும் என்சிசி‘எஃப் நிறுவனத்தின் மூலம் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்என மொத்தம் 54 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், சன்ன ரக நெல் 45,810 மெ.டன்னும். பொதுரக நெல் 1731-ஆக மொத்தம் 47,541 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டது. அதற்குரிய தொகை ரூ. 115 கோடியே 16 லட்சம் தொடா்புடைய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
எதிா்வரும் சம்பா பருவத்தில் இந்த மாவட்டத்தில் 27,074 ஹெக்டா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,65,000 மெ.டன் நெல் கொள்முதல் ஆகும் என எதிா்பாா்க்கப்படுகின்றது. இந்தநெல்லினை கொள்முதல் செய்ய 110 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேவையின் அடிப்படையில் கூடுதல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ், கூடுதல் ஆட்சியா் அனாமிகா ரமேஷ், சாா்-ஆட்சியா் (பயிற்சி) மாலதி ஹெலன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளா் ரேணுகாம்பாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி, இணை இயக்குநா் (வேளாண்மை) பிரேம்சாந்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...