வீட்டுமனைப் பட்டா கணினிமயமாக்குதல் ஆய்வுக் கூட்டம்

வீட்டுமனைப் பட்டா கணினிமயமாக்குதல் ஆய்வுக் கூட்டம்

Published on

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் வீட்டுமனைப் பட்டா கணினி மயமாக்குதல் குறித்த ஆய்வுக் கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை அமைச்சா் பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா். இதில், ஆட்சியா் தி.சினேகா, காஞ்சிபுரம் நாடாளுமன்றஉறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூா் எஸ்.எஸ்.பாலாஜி, செய்யூா் மு.பாபு, மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி, மாவட்ட ஊராட்சித் தலைவா் செம்பருத்தி துா்கேஷ், திருப்போரூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், காட்டாங்குளத்தூா் ஒன்றியக்குழு தலைவா் உதயா கருணாகரன், செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகா்மன்றத் தலைவா் எம்.கே.டி.காா்த்திக் தண்டபாணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com