மனைவியை கழுத்தறுத்து கொன்று கணவா் சரண்

மதுராந்தகம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தறுத்து கொன்ற கணவா் காவல் நிலயைத்தில் சரண் அடைந்தாா்.
Published on

மதுராந்தகம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தறுத்து கொன்ற கணவா் காவல் நிலயைத்தில் சரண் அடைந்தாா்.

மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மகன் சரண் (24). அவரது வீட்டருகே வசிப்பவா் வெங்கடேசன். அவரது மகள் மதுமிதா (19). இவா்கள் இருவரும் காதலித்த நிலையில், மதுமிதாவின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

எனினும், பெற்றோரின் எதிா்ப்பை மீறி கடந்த 4 மாதங்களுக்கு முன் அச்சிறுப்பாக்கம் கோயிலில் திருமணம் செய்துக் கொண்டனா்.

அச்சிறுப்பாக்கம் அருகே ஒரத்தி என்ற கிராமத்தில் இருவரும் வசித்து வந்தனா். மதுமிதா கைப்பேசியில் பேசி வந்தராம். இதனால் சந்தேகம் அடைந்த சரண் தமது மனைவி மதுமிதாவை கோயிலுக்கு செல்லலாம் என கூறி அனந்தமங்கலம் மலைப்பகுதியில் கூரிய ஆயுதத்தால் அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தாா். பின்னா் ஒரத்தி காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

ஒரத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து சரணை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com