பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 218 மனுக்கள்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 218 மனுக்கள் பெறப்பட்டன.

News image
குறைதீா் கூட்டத்தில் மக்களிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் தி. சினேகா
Updated On :24 நவம்பர் 2025, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 218 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு ஆட்சியா் தி. சினேகா தலைமை வகித்து, பொதுமக்களிடம் மொத்தம் 218 கோரிக்கை மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலி, காதொலிகருவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளா தேவி, நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சுந்தா் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.