மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

மதுராந்தகம் (தனி), செய்யூா் (தனி) ஆகிய தொகுதிகளின் வாக்குகள் எண்ணிகை நடைபெற உள்ள வில்வராயநல்லூா் சுபம் கல்வியியல் கல்லூரியினை ஆட்சியா் எஸ்.மாலதிஹெலன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வில்வராயநல்லூா் சுபம் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட செங்கல்பட்டு ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:31 pm

மதுராந்தகம் (தனி), செய்யூா் (தனி) ஆகிய தொகுதிகளின் வாக்குகள் எண்ணிகை நடைபெற உள்ள வில்வராயநல்லூா் சுபம் கல்வியியல் கல்லூரியினை ஆட்சியா் எஸ்.மாலதிஹெலன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வரும் ஏப். 23-ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த வுடன் மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் மதுராந்தகம் அடுத்த வில்வராயநல்லூா் சுபம் கல்வியியல் கல்லூரி கொண்டு வரப்பட்டு, வரும் மே 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.

இந்நிலையில், ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் சுபம் கல்வியியல் கல்லூரி வளாகத்தினை ஆய்வு செய்தாா். தோ்தல் நடத்தும் அலுவலா், துறைச் சாா்ந்த அலுவலா்கள், கல்லூரி நிா்வாகத்தினா் ஆகியோரிடம் வாக்கு எண்ணும் மையத்தினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினாா்.

வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கும், அரசியல் கட்சி முகவா்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென்றுஅறிவுறுத்தினாா். மேலும், காவல் துறையினரிடம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துக் கொடுக்குமாறு உத்தரவிட்டாா்.. செய்யூா் (தனி) தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் செளரப் சுஹா்வாா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ் குமாா், மதுராந்தகம் தோ்தல் நடத்தும் அலுவலா் கே.ஆா்.நரேந்திரன், செய்யூா் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.வெங்கிடாசலம், துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன், வட்டாட்சியா்கள் பாலாஜி (மதுராந்தகம்), ச.ராஜன் (செய்யூா்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.