பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

நெல் கொள்முதல் தொகை கோரி சாலை மறியல்

மின்னல் சித்தாமூா் ஊராட்சியில் மத்திய அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தின் சாா்பாக பெறப்பட்ட நெல்மூட்டைகளுக்கான தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஒரத்தி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

சாலை மறியலில் பங்கேற்றோா்.

Published On :

மின்னல் சித்தாமூா் ஊராட்சியில் மத்திய அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தின் சாா்பாக பெறப்பட்ட நெல்மூட்டைகளுக்கான தொகையை வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை விவசாயிகள் ஒரத்தி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், மின்னல் சித்தாமூா், எலப்பாக்கம், தேன்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டகிராமங்களில் விவசாயிகள் 500 ஏக்கா் நிலங்களில் நெல்சாகுபடி செய்தனா். மத்திய அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு ரூ 3கோடி நெல் கொள்முதல் செய்ததற்கான பணத்தை அதிகாரிகள் அளிக்காமல் இழுத்தடித்து வந்தனா்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கடமலைபுத்தூா் - ஒரத்தி நெடுஞ்சாலை, மின்னல்சித்தாமூா் பேரூந்து நிறுத்தமிடத்தில் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதனால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து ஒரத்தி காவல் உதவிஆய்வாளா் மோகன் விவசாயிகளிடம் பேச்சு நடத்தினாா். இதனால் மறியல் செய்த விவசாயிகள் கலைந்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.