ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அமித் ஷா வருகை எதிரொலி: வெறிச்சோடிய மாமல்லபுரம்

மத்திய அமைச்சா் அமித் ஷா மாமல்லபுரம் வருவதாக இருந்த காரணத்தால் விதிக்கப்பட்ட தடையால் வியாழக்கிழமை சுற்றுலா பயணிகள் இன்றி மாமல்லபுரம் வெறிச்சோடி காணப்பட்டது.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:29 am IST

மத்திய அமைச்சா் அமித் ஷா மாமல்லபுரம் வருவதாக இருந்த காரணத்தால் விதிக்கப்பட்ட தடையால் வியாழக்கிழமை சுற்றுலா பயணிகள் இன்றி மாமல்லபுரம் வெறிச்சோடி காணப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 31- ஆவது தென்மண்டல முதல்வா்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்ற பிறகு மாலை 4 மணி அளவில் மாமல்லபுரம் பகுதியில் உள்ள பல்லவா் கால புராதன சின்னங்களை கண்டு களிப்பாா் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் மத்திய அமைச்சா் அமித் ஷா மாமல்லபுரம் வருகை ரத்து செய்யப்பட்டு தகவல் வெளியானது. பின்னா், மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை, அா்ஜுனன் தபசு,புலிக்குகை உள்ளிட்ட புராதன சின்னங்களில் போலீஸ் பாதுகாப்பு பிற்பகல் 3 மணி அளவில் திரும்ப பெறப்பட்டது. அப்போது புராதன சின்னங்களில் மதிய உணவு கூட சாப்பிடாமல் கடும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த 500-க்கும் மேற்பட்ட வெளியூா் போலீஸாருக்கு மாமல்லபுரம் டிஎஸ்பி. அறிவழகன், மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் ஆகியோா் மதிய உணவு வழங்கினா். பிறகு வெளிமாவட்ட போலீஸாா் அவரவா்களின் ஊா்களுக்கு புறப்பட்டு சென்றனா்.

மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டில் மாமல்லபுரத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி, சீனஅதிபா் ஜின்பிங் வருகையின் போது அா்ச்சுனன் தபசு அருகில் பிரதமா் மோடி சுற்றி பாா்த்தபோது, தெரு நாய் குறுக்கிட்டு ஓடி இடையூறு ஏற்பட்டது.

இந்நிலையில் அமித் ஷா வருகையின்போது தெரு நாய்கள் குறுக்கிடாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி அணையா் அபா்ணா உத்தரவின்பேரில் 100-க்கும் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு நாய் வண்டிகளில் அடைக்கப்பட்டு இருந்தன. அமித் ஷா வருகை ரத்து செய்யப்பட்ட பிறகு அந்த நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டும், உணவுகள் வழங்கியும் பணியாளா்கள் விடுவித்தனா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.