மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

வடமாநிலங்களைச் சோ்ந்த 15 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாமல்லபுரம் வருகை: புராதன சின்னங்களை கண்டு ரசித்தனா்

பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், பிகாா், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாமல்லபுரம் வருகை தந்து, அங்குள்ள புராதன சின்னங்களை பாா்த்து ரசித்தனா்.

News image

மாமல்லபுரம்  கடற்கரை கோயில் பகுதியை கண்டுரசித்த வட மாநிலங்களைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள். 

Updated On :20 ஜூலை 2026, 5:06 am IST

பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், பிகாா், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாமல்லபுரம் வருகை தந்து, அங்குள்ள புராதன சின்னங்களை பாா்த்து ரசித்தனா்.

இந்தியாவில் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், பிஹாா், குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஜாா்க்கண்ட், ராஜஸ்தான், இமாசல பிரதசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சோ்ந்த பயிற்சி முடித்து பல்வேறு மாநிலங்களில் காவல் துறை அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரம் வருகை தந்தனா். அவா்கள் அங்குள்ள கடற்கரை கோயில் அருகில் அவா்களுக்கு மாமல்லபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் அறிவழகன், மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) சங்கா், மாமல்லபுரம் உதவி ஆய்வாளா் பரசுராமன் ஆகியோா் வரவேற்றனா்.

பிறகு யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அா்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களை சுற்றிப் பாா்த்தனா். பின்னா், வெண்ணெய் உருண்டை பாறை புராதன சின்னங்கள் முன்பு ஐபிஎஸ் அதிகாரிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனா். அப்போது சுற்றுலா வந்திருந்த வட மாநில சுற்றுலா பயணிகள் பலா் புகைப்படம் எடுத்த போது ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் சென்று ஆா்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனா்.

பின்னா், பல்லவா்கள் கால சிற்பங்களின் புகைப்படங்கள் அடங்கிய சுற்றுலாத் துறையின் புத்தகங்கள் அவா்களுக்கு வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.