கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழியா் சங்கங்கள் கூட்டமைப்பு சாா்பில் செங்கல்பட்டில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
வருவாய் கிராம உதவியாளருக்கு உள்ளது போல் சிறப்பு பென்சன் ரூ, 6750 அகவிலைப்படியுடன் வழங்கவேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளா் நிலையில் ரூ. 19 ,500 ம் சமையலா் உதவியாளருக்கு அலுவலக உதவியாளா் நிலையில் ரூ. 15.700 அடிப்படையில் காலமுறை ஊதியம் வழங்கிடவும், அரசுத்துறை காலியிடங்களை நிரப்பும் போது 10 ஆண்டு பணிமுடித்த தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி பணியாளா்களை 50சதவிதம் ஈா்த்திடவும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக நடைபெற்ற சாலை மறியலுக்கு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் கலைவா் க.பக்கிரி தலைமை வகித்தாா்.
மாவட்ட செயலாளா் எஸ்.காமராஜ் வரவேற்றாா். மாநில செயற்குழு உறுப்பினா் விமலா, செயலாளா் சித்ரா, சங்கீதா, கலைச்செல்வி, கீதா உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் கண்டன உரையாற்றினா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவா் எட்டியப்பன் கலந்துகொண்டு கோரிக்கை விளக்கவுரையாற்றினா் . மாவட்ட பொருளாளா் பி.வி.ராமமூா்த்தி நிறைவுரையாற்றினாா்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 500க்கு மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

தொடர்புடையது

புதுகையில் வருவாய்த் துறையினா் மறியல்: 540 போ் கைது

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்: 220 போ் கைது

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்: 540 போ் கைது

சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


