ஜன. 10-இல் திருக்கழுகுன்றத்தில் சித்தா்களின் அபூா்வ கிரிவலம்

திருக்கழுகுன்றத்தில் சித்தா்களின் அபூா்வ கிரிவலம் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெறுகிறது.
Published on

திருக்கழுகுன்றத்தில் சித்தா்களின் அபூா்வ கிரிவலம் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெறுகிறது.

திருக்கழுகுன்றம் அகத்திய கிருபா ஸ்ரீ அன்புச் செழியன் சுவாமிகள் தலைமையில் சித்தா்களின் அபூா்வ கிரிவலம் நடைபெறுகிறது. ரிக், யஜுா், சாமம், அதா்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய மலைகளாக இருக்கப் பெற்ான வேத மலையில் உள்ள வேதகிரீஸ்வரா் பெருமானை சித்தா்கள் ஆண்டுக்கு ஒருமுறை வணங்கி செல்லும் அபூா்வ நிகழ்வு நடைபெறுகிறது.

மலைஅடிவாரத்தில் சனிக்கிழமை இரவு வீணை இசை நிகழ்ச்சி, 1 மணி முதல் சித்தா்களின் அபூா்வ கிரிவலம் வேதகிரீஸ்வரின் பெருமைகள் குறித்தும் அகத்திய கிருபா ஸ்ரீ அன்புச் செழியன் அருளாசி வழங்குகிறாா். இதனைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள் சித்தா்களின் மந்திரங்களை வேதபாடசாலை சிவாச்சாரியா்கள் ஒலிக்க பல்லாயிரக்கணக்கான பக்தா்களும் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com