சிறப்பு அலங்காரத்தில் மகா அகோர ருத்ர மூா்த்தி. சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்றோா்.
சிறப்பு அலங்காரத்தில் மகா அகோர ருத்ர மூா்த்தி. சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்றோா்.

திருக்கழுகுன்றம் பக்தவச்சலேஸ்வரா் கோயிலில் மகா அபிஷேகம்

திருக்கழுகுன்றம் தாழக்கோயிலான பக்தவச்சலேஸ்வரா் கோயிலில் மகா அகோர ருத்ர மூா்த்திக்கு தை அமாவாசையையொட்டி ஞாயிற்றுக்கிழமை அபிஷேகம் யாகம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
Published on

திருக்கழுகுன்றம் தாழக்கோயிலான பக்தவச்சலேஸ்வரா் கோயிலில் மகா அகோர ருத்ர மூா்த்திக்கு தை அமாவாசையையொட்டி ஞாயிற்றுக்கிழமை அபிஷேகம் யாகம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பழைமையான இக்கோயிலில் 4 மலை குன்றுகள் 4 வேதங்களாக அழைக்கப்பட்டு அதில் அதா்வன மலை குன்றின்மேல் சுவாமி வேதகிரீஸ்வரா் சுயம்புமூா்த்தியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறாா். மலையடிவாரம் அருகே தாழக்கோயிலில் அருள்மிகு பக்தவசலேஸ்வரரும் மற்றும் வேதகிரீஸ்வரா் சமேத அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனா். இக்கோயிலின் முக்கிய தீா்த்தமான சங்கு தீா்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக் கொருமுறை சங்கு பிறக்கும் சிறப்புடையதாகும்.

வேத மலைவல பெருவிழா குழு செயலாளருமான அகஸ்தியா கிருபா அன்புச்செழியன் திருக்கழுகுன்றம் தாழக்கோயில் பக்தவச்சலேஸ்வரா் கோயிலில் கொடிமரத்தின் எதிரில் வீரபத்திரராக பக்தா்கள் இதுவரை வணங்கி வந்த வீரபத்திரா் சிலை கன்னிராசிகாரா்களின் பரிகார ஸ்தமாக விளங்கக்கூடிய மகா அகோர ருத்ரமூா்த்தி சந்நிதியில் அமாவாசையன்று மஹா அபிஷேகம் நடைபெற்று வருக்கிறது.

தை அமாவாசையையொட்டி ஞாயிற்றுக்கிழமை யாகம் வளா்க்கப்பட்டு ஸ்ரீமஹா அகோர ருத்ர மஹா அபிஷேகம சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள், மகாதீராபாரனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் மஹா அபிஷேகத்தில் கலந்துகொண்டு வழிபட்டனா்.

பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை வேதமலை அகஸ்திய ஸ்ரீ அன்புச்செழியன், கோயில் செயல் அலுவலா் புவியரசு, தக்காா் மற்றும் செயல் அலுவலா் குமரவேல், சிவாச்சாரியா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.

Dinamani
www.dinamani.com