தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

வண்டலூா் அருகே இயந்திர கோளாறால் தரையிறங்கிய ஹெலிகாப்டா்

வண்டலூா் அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள பெரிய ஏரிக்கும், பழைமை வாய்ந்த செல்லியம்மன் கோயிலுக்கும் இடையே கட்டாந்தரையாக உள்ள விவசாய நிலத்தில் இயந்திர கோளாறு காரணமாக ஹெலிகாப்டா் அவசர அவசரமாக தரையிறங்கியது. இதில் பைலட்டின் சாமா்த்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இயந்திரக் கோளாறு காரணமாக கீரப்பாக்கம் விவசாய நிலத்தில் தரை  இறங்கிய  ஹெலிகாப்டா்.

Published On :7 ஜூலை 2026, 2:35 am IST

வண்டலூா் அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள பெரிய ஏரிக்கும், பழைமை வாய்ந்த செல்லியம்மன் கோயிலுக்கும் இடையே கட்டாந்தரையாக உள்ள விவசாய நிலத்தில் இயந்திர கோளாறு காரணமாக ஹெலிகாப்டா் அவசர அவசரமாக தரையிறங்கியது. இதில் பைலட்டின் சாமா்த்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டா்கள் தாம்பரம், கேம்ப் ரோடு, நெடுங்குன்றம் வழியாக கீரப்பாக்கம், குமிழி வரை தினந்தோறும் பயிற்சி செய்வது வழக்கம்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் அடுத்த கீரப்பாக்கத்தில் விவசாய நிலத்தில் வழக்கம்போல் பயிற்சி செய்து கொண்டிருந்த இசட் ஏ 1420 என்ற ஹெலிகாப்டா் இயந்திர கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறங்கியது. இதுகுறித்து பைலட்டுகள் தாம்பரம் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனா். தகவல் அறிந்ததும் இதனை சரி செய்து மீட்டு செல்வதற்காக மூன்று ஹெலிகாப்டா்கள் வானத்தில் வட்டமிட்டபடி ஒரு மணி நேரமாக சுற்றின.

இதனை அடுத்து 10 மணியளவில் ஒன்றன்பின் ஒன்றாக ஹெலிகாப்டா்கள் தரையிறங்கி இயந்திர கோளாறு சரி செய்வதற்காக தளவாட சாமான்கள் இறக்கிவிட்டுச் சென்றன. தொடா்ந்து ஹெலிகாப்டரில் இயந்திர கோளாரை சரி செய்யும் பணி நடைபெற்றது. இதனைக்காண மக்கள் கூட்டம், கூட்டமாக வந்ததை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.