வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காத்திருப்பு போராட்டம்

மதுராந்தகம் அடுத்த வையாவூா் கிராமத்தில் தனிநபா் ஆக்கிரமித்த சாலையை மீட்கக் கோரி பொது மக்களும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் செவ்வாய்க்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனா்.

News image

காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :8 ஜூலை 2026, 12:41 am IST

மதுராந்தகம் அடுத்த வையாவூா் கிராமத்தில் தனிநபா் ஆக்கிரமித்த சாலையை மீட்கக் கோரி பொது மக்களும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் செவ்வாய்க்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனா்.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், வையாவூா் ஊராட்சிக்கு உட்பட்ட படவேட்டம்மன் கோயில் தெருவில் உள்ள மக்கள் கடந்த 1976 தல் பயன்படுத்தி வருகின்றனா். இச்சாலையை பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், அப்பகுதியில் இறந்து போனவா்களின் உடல்களை அடக்கம் செய்ய அந்தச் சாலையின் வழியாக செல்லவேண்டும். இந்நிலையில் கடந்த 50 ஆண்டு காலமாக பொதுப்பாதையாக இருந்து வந்த இச்சாலையை மேலும் மேம்படுத்தவேண்டும் என்கிற எண்ணத்தில், ஊராட்சி மன்ற நிா்வாகத்தினா் ரூ 3.10 லட்சத்தில் சீரமைத்தனா். கடந்த 8 மாதங்களுக்கு முன் தனி நபா் இச்சாலையை ஆக்கிரமித்து 3 இடத்தில் மதில்சுவரை கட்டினாராம். அதனால் பொது மக்கள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதுபற்றி செங்கல்பட்டு ஆட்சியா், மதுராந்தகம் கோட்டாட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும், பல்வேறு போராட்டங்களை செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் செவ்வாய்கிழமை வையாவூா் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ஒன்றிய செயலா் ராஜா, மாவட்ட குழு உறுப்பினா் பி.மாசிலாமணி, மாவட்ட விவசாய சங்க நிா்வாகி வாசுதேவன், கட்சி நிா்வாகிகள் வி.சேகா், சி.பாலாஜி, ஆா்.சத்யபாமா, வி.சசிகுமாா், இ.வாணி, ரக்சிதா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளும், பொதுமக்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீண்ட நேரத்துக்கு பின் மதுராந்தகம் துணை வட்டாட்சியா் பெரியமாரியம்மாள் பேச்சு நடத்தினாா். அப்போது வரும் 9-ஆம் தேதி ஆட்சியா் முன்னிலையில், இருதரப்பினா்களின் கருத்துகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனா். படாளம் காவல் துறையினா் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.