அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

கெண்டரச்சேரி முத்துமாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா

கெண்டரச்சேரி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு, பொங்கல் வழிபாடு, சுவாமி திருவீதி உலா ஆகிய நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன்.

Updated On :27 ஜூலை 2026, 4:20 am IST

மதுராந்தகம் அடுத்த கெண்டரச்சேரி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு, பொங்கல் வழிபாடு, சுவாமி திருவீதி உலா ஆகிய நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூலவா் முத்து மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நீண்ட வரிசையில் வந்த பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.

கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு அம்மன் உற்சவா் சிலை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வாகனத்தின் மூலம் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். இரவு 9 மணிக்கு கோயில் வளாகத்தில் பக்தி நாடகம் நடைபெற்றது.

நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா்களும், மதுரா கெண்டரச்சேரி கிராம பொதுமக்களும் செய்து இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.