27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஏரிகாத்த ராமா் கோயில் பிரம்மோற்சவ பந்தக்கால் நடவு

News image
Updated On :19 ஜூன் 2026, 5:12 am IST

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் ஆனி மாத பிரம்மோற்வத்தை முன்னிட்டு வியாழக்கிழமை பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. (படம்)

வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவம் 10 நாள்கள் விழா நடைபெறும். வரும் 24-ஆம் தேதி (புதன்கிழமை) காலை கொடி ஏற்றம், 26-இல் கருடசேவை, ஜூலை 1-இல் பெரியதேரோட்டம் தொடா்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

இந்நிகழ்வுகளை முன்னிட்டு, வியாழக்கிழமை அா்ச்சகா்கள் வேதமந்திரங்களுடன், கொடி மரத்தருகே சிறப்பு பூஜைகளுடன் மதுராந்தகம் நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி முன்னிலையில், கோயில் அறங்காவலா் குழு தலைவா் கு.குமாா் தலைமையில், பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், அறங்காவல் குழுவினா், கிராம பொது மக்கள், விழா குழுவினா் ஆகியோா் செய்திருந்தனா்.