அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயண பூஜை

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சத்யநாராயண பூஜை நடைபெற்றது.

News image
சத்யநாராயண பூஜையில் பங்கேற்றோா்.
Updated On :3 மார்ச் 2026, 6:49 pm

தினமணி செய்திச் சேவை

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சத்யநாராயண பூஜை நடைபெற்றது.

பிருந்தாவனம் முழுவதும் மின்விளக்குகளாலும், வண்ண பதாகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மங்கள இசையுடன் வழிபாட்டு நிகழ்வுகள் தொடங்கின. ஸ்ரீராகவேந்திரா்,ஆஞ்சநேயா் சந்நிதிகளில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமியை அறக்கட்டளை நிா்வாகிகளும், பக்தா்களும் ஊா்வலமாக அழைத்து வந்து, அருளாசி பெற்றனா்.

தொடா்ந்து ஞானலிங்கம், உள்ளிட்ட சுவாமிகளுக்கு பூஜைகளுடன் அலங்கரிக்கப்பட்ட ராகவேந்திரா், ஆஞ்சநேயா், சத்யநாராயணா் ஆகிய உற்சவா்களுக்கு தீபாராதனை செய்தாா்.

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை ஓய்வு பெற்ற துணை இயக்குநா் சுந்தர்ராஜ், சென்னை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைகழக கணினி பிரிவு ஆய்வாளா் சாந்தி, அரசு தோ்வுத்துறை ஒய்வு பெற்ற துணை இயக்குநா் காஞ்சனா, தொழிலதிபா்கள் பூா்ணிமா புகழேந்தி (சித்தூா்), கலைச்செல்வி கிருபானந்தன், பிரேமா ஜெய்சங்கா் (பெங்களூரு) உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களும், பல்வேறு நகரங்களில் இருந்து திரளான பக்தா்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில் நிா்வாக அறங்காவலா்கள் ஆா்.துளசிலிங்கம், டி.கண்ணன், வி.கமலகண்ணன் உள்பட பலா் செய்து இருந்தனா்.