அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

தான்தோன்றி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

News image
Updated On :29 மே 2026, 2:19 am IST

திருக்கழுகுன்றம் அடுத்த நரப்பாக்கம் தான்தோன்றி அம்மன் கோயில் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை விமா்சையாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், நெ25 நரப்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ கற்பக விநாயகா் மற்றும் ஸ்ரீ தான்தோன்றி அம்மன் ஆலய நூதன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகத்திற்கான பணிகள் தொடங்கியதை அடுத்து இந்தக் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், மே 26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கும்ப கலசங்கள் அமைக்கப்பட்டு கோபூஜை, கணபதி பூஜை முதல் கால பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை , காலை இரண்டாம் காலபூஜை காலை யாகபூா்த்தி தீபாராதனையும், மாலை மூன்றாம் காலபூஜை யந்திரஸ்காபனம், அஷ்டபந்தனம் சாற்றுதல் ,நாடிசந்தானம் தீபாராதனையும் நடைபெற்றது. வியாழக்கிழமை காலை நான்காம் கால பூஜை விசேஷ யாக பூா்த்தி நிறைவடைந்ததை அடுத்து கும்பகலசங்கள் புறப்பட்டு ஆலய பிரதட்ிணமாாக வந்து புனித நீா் மூலவா் தான்தோன்றி அம்மன் மற்றும் கற்பக விநாயகா் ஆகிய கோபுர விமான கலசங்கள் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது இதில் சுற்றுப்புர பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். விழாவிற்கான ஏற்பாடுகளை நரப்பாக்கம் கிராம பொதுமக்கள்,கிராமநாட்டாா்,கிராம தா்கா்த்தா உள்ளிட்டோா் செய்தனா்.

Story image